An-Najm
அந்-நஜ்ம்
நட்சத்திரம்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ
வன்-நஜ்ம் இழா ஹவா
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
- 2 مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ
ழல்லா வமா கவா
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
- 3 وَمَا یَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰۤ
வமா யந்திகு அனே
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
- 4 إِنۡ هُوَ إِلَّا وَحۡیࣱ یُوحَىٰ
ஹு இல்லா வஹீ யூஹா
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
- 5 عَلَّمَهُۥ شَدِیدُ ٱلۡقُوَىٰ
ஷதீத் அல்-குவா
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
- 6 ذُو مِرَّةࣲ فَٱسۡتَوَىٰ
து மெர்ர ஃபஸ்தவா
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
- 7 وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ
வஹுவ பெலுஃபுகி அல் ஆ'லா
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
- 8 ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
தும்ம தனா ஃபததல்லா
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
- 9 فَكَانَ قَابَ قَوۡسَیۡنِ أَوۡ أَدۡنَىٰ
ஃபகான காபா கௌஸைனி ஔ அத்னா
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
- 10 فَأَوۡحَىٰۤ إِلَىٰ عَبۡدِهِۦ مَاۤ أَوۡحَىٰ
ஃபௌஹியா இலா மா ஔஹா
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
- 11 مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰۤ
கஃதப அல் ஃபுஆது ராஆ
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
- 12 أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا یَرَىٰ
அஃபா துமாரூனாஹு அலா யாரா
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
- 13 وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ
வ-லக்த் ராஹு நஸ்லதன் உக்ரா
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
- 14 عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ
எந்த சித்ராதி அல்-முந்தஹா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
- 15 عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰۤ
இந்தஹா ஜன்னா
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
- 16 إِذۡ یَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا یَغۡشَىٰ
இழ் யாஷியா அஸ்-ஸித்ரா யக்ஷா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
- 17 مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ
ழாக அல்-பஸரு வமா தாக்யா
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
- 18 لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَایَـٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰۤ
லகத் ஆயத் ரப்பிஹி
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
- 19 أَفَرَءَیۡتُمُ ٱللَّـٰتَ وَٱلۡعُزَّىٰ
அஃபராய்தும் அல்லாஹு வல் உஸ்ஸா
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
- 20 وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰۤ
வமனவாத அஸ்-ஸாலிஸா அல் உக்ரா
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
- 21 أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ
அலகுமு அல்-தகரு வல்லாஹு அல்-உன்ஸா
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
- 22 تِلۡكَ إِذࣰا قِسۡمَةࣱ ضِیزَىٰۤ
தெல்கா இழா கிஸ்மத் ழிழியா
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
- 23 إِنۡ هِیَ إِلَّاۤ أَسۡمَاۤءࣱ سَمَّیۡتُمُوهَاۤ أَنتُمۡ وَءَابَاۤؤُكُم مَّاۤ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَـٰنٍۚ إِن یَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَاۤءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰۤ
ஹேய அஸ்மா ஸம்மய்தெமுஹா அன்தும் வஅபாஊகும் அன்ஸல அல்லாஹ் பெஹா மின் சுல்தான் இன் யத்தபிஊன் இல்லா அஸ்-ஸன்னா வமா தஹ்வா அல்-அன்ஃபுஸு வ-லக்த் ஜாஆஹும் மின் ரப்பிஹிமு அல்ஹுதா
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
- 24 أَمۡ لِلۡإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ
அம் லில் இன்சான் தமன்னா
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
- 25 فَلِلَّهِ ٱلۡـَٔاخِرَةُ وَٱلۡأُولَىٰ
பா லில்லாஹி அல்-ஆகிரத் வல்-உல்யா
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
- 26 ۞ وَكَم مِّن مَّلَكࣲ فِی ٱلسَّمَـٰوَ ٰتِ لَا تُغۡنِی شَفَـٰعَتُهُمۡ شَیۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن یَأۡذَنَ ٱللَّهُ لِمَن یَشَاۤءُ وَیَرۡضَىٰۤ
வகம் மின் மலக் ஃபே அஸ்-ஸமாவா நம்பிக்கை டெ துக்னீ ஷஃபாஆதுஹும் ஷையன் இல்லா பதி அன் யஃஜன அல்லாஹ் யேஷா வயேர்தா
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
- 27 إِنَّ ٱلَّذِینَ لَا یُؤۡمِنُونَ بِٱلۡـَٔاخِرَةِ لَیُسَمُّونَ ٱلۡمَلَـٰۤىِٕكَةَ تَسۡمِیَةَ ٱلۡأُنثَىٰ
இன்னா அல்லாழீன யூமினூன் பில் ஆகிரத் லயுஸம்மூன அல்-மலாயிகா தஸ்மியா அல்-உன்ஸா
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
- 28 وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن یَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا یُغۡنِی مِنَ ٱلۡحَقِّ شَیۡـࣰٔا
வமா பெஹி இல்மின் இன் யத்தபிஊன் இல்லா வா இன்னா அஸ்-ஸன்னா யுக்னீ மின அல்-ஹக்கி
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
- 29 فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ یُرِدۡ إِلَّا ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا
ஃபாயிர் அன் மென் தவல்லா அன் ஜிக்ரினா வலம் யுரேத் இல்லா அல்-ஹயாத் துனியா
ஆகவே, எவன் நம்மை தியானிப்தை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
- 30 ذَ ٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِیلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ
ழ நம்பிக்கை லேகா மப்லகுஹும் மின் அல்-இல்ம் இன்னா ரப்பக் ஹு அ'லாமு பிமன் ழல்லா அன் சபீலிஹி வஹுவ அ'லாமு பிமனி இஹ்தாதா
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான், நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான், நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
- 31 وَلِلَّهِ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰتِ وَمَا فِی ٱلۡأَرۡضِ لِیَجۡزِیَ ٱلَّذِینَ أَسَـٰۤـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَیَجۡزِیَ ٱلَّذِینَ أَحۡسَنُوا۟ بِٱلۡحُسۡنَى
வலில்லாஹ் ஃபே அஸ்-ஸமாவா நம்பிக்கை டெ வமா ஃபே அல்-அர்த் லெய்ஜிய அல்லாழீன அஸாவ் பிமா வய்க்ஃஜிய அல்லாழீன அஹ்ஸனூ பில்ஹுஸ்னா
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
- 32 ٱلَّذِینَ یَجۡتَنِبُونَ كَبَـٰۤىِٕرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَ ٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَ ٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةࣱ فِی بُطُونِ أُمَّهَـٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوۤا۟ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰۤ
அல்லாழீன யஜ்தனிபூன் கபாயிர அல்-இத்மி வல்-ஃபவா நம்பிக்கை ஹேஷ இல்லா அல்லாமாமா இன்னா ரப்பக் மற்றும் நம்பிக்கை ஸெஉ ஹு அ'லாமு பெகும் இழ் மின் அல்-அர்த் வா இஃஜ் அன்தும் அஜின்னா ஃபே புதூனி உம்மாஹாதிகும் ஃபலா துஃஜக்குவா ஹு அ'லாமு பிமனி இத்தகா
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
- 33 أَفَرَءَیۡتَ ٱلَّذِی تَوَلَّىٰ
அஃபராய்தா அல்லாழீ தவல்லா
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
- 34 وَأَعۡطَىٰ قَلِیلࣰا وَأَكۡدَىٰۤ
வா அதா கலீலான் வா அக்தா
அவன் ஒரு சிறிதே கொடுத்தான், பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
- 35 أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَیۡبِ فَهُوَ یَرَىٰۤ
ஆ இந்தஹு இல்மு அல்-ஃகைபி பஹுவ
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அவன் பார்க்கிறானா?
- 36 أَمۡ لَمۡ یُنَبَّأۡ بِمَا فِی صُحُفِ مُوسَىٰ
அம் லம் யுனப்பா பிமா ஃபே ஸுஹுஃபி
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
- 37 وَإِبۡرَ ٰهِیمَ ٱلَّذِی وَفَّىٰۤ
இப்ராஹிம் நம்பிக்கை ஹேம அல்லாழீ வஃப்பா
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
- 38 أَلَّا تَزِرُ وَازِرَةࣱ وِزۡرَ أُخۡرَىٰ
அல்லா தழிரு வசீரா வெஸ்ர உக்ரா
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்,
- 39 وَأَن لَّیۡسَ لِلۡإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ
வா அன் லைஸ லில் இன்சான் இல்லா ஸாஆ
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
- 40 وَأَنَّ سَعۡیَهُۥ سَوۡفَ یُرَىٰ
வா-அன்னா சய்யஹு சௌஃப் யுரா
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
- 41 ثُمَّ یُجۡزَىٰهُ ٱلۡجَزَاۤءَ ٱلۡأَوۡفَىٰ
தும்ம யுஜ்ஸாஹு அல்-ஜஸா அல் அவ்ஃபா
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
- 42 وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ
வா-அன்னா இலா ரப்பிக் அல்-முந்தஹா
மேலும் உம் இறைவனில் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
- 43 وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ
வ அன்னஹு ஹு அஸ்ஹக வா அப்க்யா
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்.
- 44 وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡیَا
வ அன்னஹு ஹு அமாத வா ஹியா
இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
- 45 وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَیۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ
வ அன்னஹு கலக அல்-ஜௌஜைன் அல்-தகரா
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
- 46 مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ
மின் நுத்ஃபா இழா தும்னியா
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
- 47 وَأَنَّ عَلَیۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ
வா-அன்னா அலய்ஹி அன்-நஷஅத்
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
- 48 وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ
வ அன்னஹு ஹு அஃக்னா வ அக்னா
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
- 49 وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ
வ அன்னஹு ஹு ரப்பு அஷ்-ஷிஅரா
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
- 50 وَأَنَّهُۥۤ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ
அஹ்லக் அதான் அல்-உலா
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
- 51 وَثَمُودَا۟ فَمَاۤ أَبۡقَىٰ
வஸ்முதா அப்கா
'ஸமூது' (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
- 52 وَقَوۡمَ نُوحࣲ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُوا۟ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ
வகௌம் மின் இன்னாஹும் கானூ ஹும் அழ்லம் வா அத்கா
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
- 53 وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ
வல்முத்ஃபிகா அஹ்வா
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
- 54 فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
ஃபகஷ்ஷாஹா கஷ்ஷா
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
- 55 فَبِأَیِّ ءَالَاۤءِ رَبِّكَ تَتَمَارَىٰ
ஃபபைய்யி அலாய் ரப்பிக் தாதமாரியா
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
- 56 هَـٰذَا نَذِیرࣱ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰۤ
ஹாஸா நஜீர் மின் அன்-னுழுர்
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
- 57 أَزِفَتِ ٱلۡـَٔازِفَةُ
அஸிஃபத் அல்-ஆஸிஃபா
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
- 58 لَیۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
லைஸ லஹா மின் தூனே அல்லாஹ் காஷிஃபாதுன்
(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
- 59 أَفَمِنۡ هَـٰذَا ٱلۡحَدِیثِ تَعۡجَبُونَ
அஃபாமின் ஹாஸா தஅஜ்பூன
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
- 60 وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ
வத-தகூன் தப்கோன்
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
- 61 وَأَنتُمۡ سَـٰمِدُونَ
மேலும் நீங்கள் சாமிதூன்
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
- 62 فَٱسۡجُدُوا۟ لِلَّهِ وَٱعۡبُدُوا۟ ۩
ஃபஸ்ஜுது லில்லாஹிஹ வஅபுது
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
This surah in other languages
- বাংলা আন-নাজম
- Bosanski En-Nedžm
- Нохчийн Ан-Нажм
- Deutsch An-Nadschm
- English An-Najm
- Español An-Náym
- فارسی ان-نجم
- Français An-Najm
- Hausa An-Najm
- עברית א-נג'ם
- हिन्दी अन-नज्म
- Bahasa Indonesia An-Najm
- 日本語 アン・ナジュム
- 한국어 안-나즘
- کوردی ئەننەجم
- Bahasa Melayu An-Najm
- Nederlands An-Nadjm
- پنجابی النَّجْم
- ਪੰਜਾਬੀ ਅਨ-ਨਜਮ
- پښتو النَّجم
- Português An-Najm
- Русский Ан-Наджм
- Soomaaliga An-Najm
- Shqip En-Nexhm
- Kiswahili An-Najmi
- தமிழ் அந்-நஜ்ம்
- ไทย อัน-นัจม์
- Türkçe Necm
- اردو النجم
- Oʻzbek An-Najm
- 中文 奈智姆