Goddestination

Ash-Shams

அஷ்-ஷம்ஸ்

சூரியன்

15 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا

    வஷ் ஷம்ஸி வதுஹாஹா

    சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

  2. 2 وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

    வல்-கமரி இழா தலியா

    (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

  3. 3 وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

    வல்நஹார் இழா ஜல்லாஹா

    (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

  4. 4 وَٱلَّیۡلِ إِذَا یَغۡشَىٰهَا

    வல்லைலி இழா யக்ஷா

    (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

  5. 5 وَٱلسَّمَاۤءِ وَمَا بَنَىٰهَا

    வஸ்-ஸமா வமா பனியாஹா

    வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

  6. 6 وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا

    வல் அர்தி வமா தாஹாஹா

    பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

  7. 7 وَنَفۡسࣲ وَمَا سَوَّىٰهَا

    வா நஃப்ஸ் வமா சவ்வாஹா

    ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

  8. 8 فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا

    ஃபா அல்ஹமாஹா ஃபுஜுராஹா வதக்யா

    அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

  9. 9 قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا

    கத் அஃப்லஹ மேன் ஜக்காஹா

    அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

  10. 10 وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا

    வகித் காப மேன் தஸ்ஸாயஹா

    ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

  11. 11 كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَاۤ

    கத்தபத் தமூது பிதஃவாஹா

    'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

  12. 12 إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا

    இழ் இன்பாஆத் அஷ்காஹா

    அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

  13. 13 فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡیَـٰهَا

    ஃபகாலா லாஹும் இரசூல் அல்லாஹ் நாஸா அல்லாஹ் வெசுக்யாஹா

    அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

  14. 14 فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَیۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا

    ஃபகத்தபுஹு ஃபகருஹா ஃபதம்தம அலைஹிம் ரப்புஹும் பிஃஜன்பிஹிம் ஃபஸவ்வாஹா

    ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

  15. 15 وَلَا یَخَافُ عُقۡبَـٰهَا

    யகாஃபு உக்பாஹா

    அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

This surah in other languages