Goddestination

Al-Lail

அல்-லைல்

இரவு

21 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلَّیۡلِ إِذَا یَغۡشَىٰ

    வல்லைலி இழா யக்ஷா

    (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

  2. 2 وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

    வல்நஹார் இழா தஜல்லா

    பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

  3. 3 وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰۤ

    வமா கலக அல்-தகரா வல்-உந்தா

    ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

  4. 4 إِنَّ سَعۡیَكُمۡ لَشَتَّىٰ

    இன்னா சையுகும் லஷத்தா

    நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

  5. 5 فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ

    பாமா அதா வத்தக்கா

    எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

  6. 6 وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ

    வ ஸத்தகா பில்ஹுஸ்னா

    நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

  7. 7 فَسَنُیَسِّرُهُۥ لِلۡیُسۡرَىٰ

    ஃபஸனுயஸ்ஸிருஹு லில் யுஸ்ரா

    அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

  8. 8 وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ

    வா அம்மா பகில வஸ்தஃக்னியா

    ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

  9. 9 وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ

    வா கத்தாபா பில்ஹுஸ்னா

    இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

  10. 10 فَسَنُیَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ

    ஃபஸனுயஸ்ஸிருஹு லில் உஸ்ரா

    அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

  11. 11 وَمَا یُغۡنِی عَنۡهُ مَالُهُۥۤ إِذَا تَرَدَّىٰۤ

    வமா யுக்னீ அன்ஹு இழா தரத்தா

    ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

  12. 12 إِنَّ عَلَیۡنَا لَلۡهُدَىٰ

    இன்னா அலைனா லல்ஹுதா

    நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.

  13. 13 وَإِنَّ لَنَا لَلۡـَٔاخِرَةَ وَٱلۡأُولَىٰ

    வா இன்னா லனா லல்-ஆகிர வல்-உல்யா

    அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

  14. 14 فَأَنذَرۡتُكُمۡ نَارࣰا تَلَظَّىٰ

    ஃபா அன்ழர்துக்கும் நாரா தலாழ்ழா

    ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

  15. 15 لَا یَصۡلَىٰهَاۤ إِلَّا ٱلۡأَشۡقَى

    யஸ்லாயா இல்லா அல்-அஷ்கா

    மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

  16. 16 ٱلَّذِی كَذَّبَ وَتَوَلَّىٰ

    அல்லாழீ கத்தப்பா

    எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

  17. 17 وَسَیُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى

    வஸையுஜன்னாபுஹா அல்-அத்கா

    ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

  18. 18 ٱلَّذِی یُؤۡتِی مَالَهُۥ یَتَزَكَّىٰ

    அல்லாழீ யோதி யதஃஜக்கா

    (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

  19. 19 وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةࣲ تُجۡزَىٰۤ

    வமா லெஅஹதின் இந்தஹு மின் நிஃமத் துஜ-யா

    மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

  20. 20 إِلَّا ٱبۡتِغَاۤءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ

    இல்லா இப்திகா வஜ்ஹி ரப்பிஹி அல் ஆ'லா

    மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).

  21. 21 وَلَسَوۡفَ یَرۡضَىٰ

    வெலஸோஃப் யார்ஸா

    வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

This surah in other languages