Al-Alaq
அல்-அலக்
உறைந்த இரத்தம்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِی خَلَقَ
இக்ரா பிஸ்மி ரப்பிக் அல்லாழீ கலக
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
- 2 خَلَقَ ٱلۡإِنسَـٰنَ مِنۡ عَلَقٍ
கலக அல்-இன்சான் அலக்கின்
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
- 3 ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
இக்ரா வ ரப்புக அல்-அகரமு
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
- 4 ٱلَّذِی عَلَّمَ بِٱلۡقَلَمِ
அல்லாழீ அல்லாமா பில் கலமி
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- 5 عَلَّمَ ٱلۡإِنسَـٰنَ مَا لَمۡ یَعۡلَمۡ
அல்லாமா அல்-இன்சான் லம் யாலம்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
- 6 كَلَّاۤ إِنَّ ٱلۡإِنسَـٰنَ لَیَطۡغَىٰۤ
இன்னா அல்-இன்சான் லைத்கா
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
- 7 أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰۤ
அன் ராஆஹு இஸ்தஃக்னியா
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
- 8 إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰۤ
இன்னா இலா ரப்பிக் அர்-ருஜா
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
- 9 أَرَءَیۡتَ ٱلَّذِی یَنۡهَىٰ
அராய்த அல்லாழீ யான்ஹா
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
- 10 عَبۡدًا إِذَا صَلَّىٰۤ
அப்தா இழா ஸல்லா
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
- 11 أَرَءَیۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰۤ
அராய்த இன் கானா அலை அல்ஹுதா
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
- 12 أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰۤ
ஔ அமர பில்-தக்வா
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
- 13 أَرَءَیۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰۤ
அராய்த இன் கத்தப்பா வா தவல்லா
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
- 14 أَلَمۡ یَعۡلَم بِأَنَّ ٱللَّهَ یَرَىٰ
அலம் பெஅன்ன அல்லாஹ் யாரா
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
- 15 كَلَّا لَىِٕن لَّمۡ یَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِیَةِ
லாயின் லம் யெந்தஹெ லானஸ்ஃபா பெ-ன்னாஸீயாதி
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
- 16 نَاصِیَةࣲ كَـٰذِبَةٍ خَاطِئَةࣲ
நாஸியத் காஸிபா காதியா
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
- 17 فَلۡیَدۡعُ نَادِیَهُۥ
ஃபாலிது நாதியா
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
- 18 سَنَدۡعُ ٱلزَّبَانِیَةَ
சென்டு அல்-ஜபானியா
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
- 19 كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡ وَٱقۡتَرِب ۩
தூதிஹ் வஸ்ஜுத் வக்தரிப்
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
This surah in other languages
- বাংলা আল-আলাক
- Bosanski El-Alak
- Нохчийн Аль-`Алакъ
- Deutsch Al-Alaq
- English Al-Alaq
- Español Al-Alaq
- فارسی عَلَق
- Français Al-Alaq
- Hausa Al-Alaq
- עברית אל-עלק
- हिन्दी अल-अलक़
- Bahasa Indonesia Al-'Alaq
- 日本語 アル=アラク
- 한국어 알-알라크
- کوردی El-Eleq
- Bahasa Melayu Al-'Alaq
- Nederlands Al-Alaq
- پنجابی العَلَق
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਅਲਕ਼
- پښتو العَلَق
- Português Al-Alaq
- Русский Аль-Аляк
- Soomaaliga Al-'Alaq
- Shqip El-Alek
- Kiswahili Al-Alaq
- தமிழ் அல்-அலக்
- ไทย อัล-อะลัก
- Türkçe Alak
- اردو العَلَق
- Oʻzbek Al-Alaq
- 中文 阿莱格