Goddestination

An-Naba

அந்-நபா

செய்தி

40 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 عَمَّ یَتَسَاۤءَلُونَ

    அம்ம யதஸாஅலூன

    எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

  2. 2 عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِیمِ

    அனே அன்-நபா அல்-அஸீம்

    மகத்தான அச்செய்தியைப் பற்றி,

  3. 3 ٱلَّذِی هُمۡ فِیهِ مُخۡتَلِفُونَ

    அல்லாழீ ஹும் ஃபீயே முக்தலிஃபூன்

    எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

  4. 4 كَلَّا سَیَعۡلَمُونَ

    ஸாயல்மூன்

    அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

  5. 5 ثُمَّ كَلَّا سَیَعۡلَمُونَ

    தும்ம ஸாயல்மூன்

    பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

  6. 6 أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَـٰدࣰا

    அலம் நஜஅலி அல்-அர்த் மெஹாதா

    நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

  7. 7 وَٱلۡجِبَالَ أَوۡتَادࣰا

    வல்-ஜிபாலா ஓதாதான்

    இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

  8. 8 وَخَلَقۡنَـٰكُمۡ أَزۡوَ ٰ⁠جࣰا

    வா கலக்னாகும் அஃஸ்வ நம்பிக்கை ஜா

    இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

  9. 9 وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتࣰا

    வஜஅல்னா னௌமுகும் சுபாதன்

    மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

  10. 10 وَجَعَلۡنَا ٱلَّیۡلَ لِبَاسࣰا

    வஜஅல்னா அல்லைல் லிபாஸ்

    அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

  11. 11 وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشࣰا

    வஜஅல்னா அன்-நஹார் மாஅஷன்

    மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

  12. 12 وَبَنَیۡنَا فَوۡقَكُمۡ سَبۡعࣰا شِدَادࣰا

    வபன்ய ஃபௌகும் சபஅன் ஷெதாதான்

    உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

  13. 13 وَجَعَلۡنَا سِرَاجࣰا وَهَّاجࣰا

    வஜஅல்னா சிராஜன் வஹ்ஹாஜ்

    ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

  14. 14 وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَ ٰ⁠تِ مَاۤءࣰ ثَجَّاجࣰا

    நாம் அருளினோம் மின அல்-முஸிரா நம்பிக்கை டெ மா தஜ்ஜாஜ்

    அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

  15. 15 لِّنُخۡرِجَ بِهِۦ حَبࣰّا وَنَبَاتࣰا

    லினுக்ரிஜ பெஹி ஹப்பன் உநபதன்

    அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

  16. 16 وَجَنَّـٰتٍ أَلۡفَافًا

    வஜன்னாத் அல்ஃபாஃபான்

    (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

  17. 17 إِنَّ یَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِیقَـٰتࣰا

    இன்னா யவும் அல்-ஃபஸ்லி கானா மேய்காதென்

    நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

  18. 18 یَوۡمَ یُنفَخُ فِی ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجࣰا

    யவும் யுன்பகு ஃபே அஸ்-ஸூரீ ஃபெதஊன அப்வாஜா

    ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

  19. 19 وَفُتِحَتِ ٱلسَّمَاۤءُ فَكَانَتۡ أَبۡوَ ٰ⁠بࣰا

    வஃபுதெத் அஸ்-ஸமாஉ ஃபகானத் அபு நம்பிக்கை பா

    இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

  20. 20 وَسُیِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا

    வஸிய்யிரத் அல்-ஜிபாலு ஃபகானத் ஸராபா

    மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

  21. 21 إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادࣰا

    இன்னா ஜஹன்னம் கானத் மெர்ஸாதா

    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

  22. 22 لِّلطَّـٰغِینَ مَـَٔابࣰا

    லிலத்தாகீன் மாஅபா

    வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

  23. 23 لَّـٰبِثِینَ فِیهَاۤ أَحۡقَابࣰا

    லாபிஸின் அஹ்காபன்

    அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

  24. 24 لَّا یَذُوقُونَ فِیهَا بَرۡدࣰا وَلَا شَرَابًا

    லா யஜூகூன் பிஹா பர்தா ஷரபான்

    அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

  25. 25 إِلَّا حَمِیمࣰا وَغَسَّاقࣰا

    இல்லா ஹமீம் வகஸ்ஸாகன்

    கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

  26. 26 جَزَاۤءࣰ وِفَاقًا

    ஜஸா வெஃபகன்

    (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

  27. 27 إِنَّهُمۡ كَانُوا۟ لَا یَرۡجُونَ حِسَابࣰا

    இன்னாஹும் கானூ யார்ஜூனா ஹிஸாபன்

    நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

  28. 28 وَكَذَّبُوا۟ بِـَٔایَـٰتِنَا كِذَّابࣰا

    வ கத்தாபூ பெ-ஆ-யா-தீ-னா கெழ்ழாபன்

    அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

  29. 29 وَكُلَّ شَیۡءٍ أَحۡصَیۡنَـٰهُ كِتَـٰبࣰا

    வ குல்ல ஷை அஹ்ஸைனா கிதாபன்

    நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

  30. 30 فَذُوقُوا۟ فَلَن نَّزِیدَكُمۡ إِلَّا عَذَابًا

    ஃபழூகூ ஃபலன் நஜீதகும் இல்லா அஸாபான்

    "ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

  31. 31 إِنَّ لِلۡمُتَّقِینَ مَفَازًا

    இன்னா லில் முத்தகீன் மஃபஃஜன்

    நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

  32. 32 حَدَاۤىِٕقَ وَأَعۡنَـٰبࣰا

    ஹதாயிகா மற்றும் திராட்சை

    தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

  33. 33 وَكَوَاعِبَ أَتۡرَابࣰا

    வகவாபா அத்ராபன்

    ஒரே வயதுள்ள கன்னிகளும்.

  34. 34 وَكَأۡسࣰا دِهَاقࣰا

    வகாஸ் தேஹாகா

    பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

  35. 35 لَّا یَسۡمَعُونَ فِیهَا لَغۡوࣰا وَلَا كِذَّ ٰ⁠بࣰا

    லா யாஸ்மஊன் பிஹா லஃக்வா கெஃஜா நம்பிக்கை பா

    அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

  36. 36 جَزَاۤءࣰ مِّن رَّبِّكَ عَطَاۤءً حِسَابࣰا

    ஜஸா மின் ரப்பிக் அதா ஹிஸாபன்

    (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

  37. 37 رَّبِّ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَا ٱلرَّحۡمَـٰنِۖ لَا یَمۡلِكُونَ مِنۡهُ خِطَابࣰا

    ரப்பி அஸ்-ஸமாவா நம்பிக்கை டெ வல் அர்தி வமா பைனஹுமா யம்லிகூன் மின்ஹு கிதாபென்

    (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

  38. 38 یَوۡمَ یَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰۤىِٕكَةُ صَفࣰّاۖ لَّا یَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَـٰنُ وَقَالَ صَوَابࣰا

    யவும் யாகூமு அர்-ரூஹு வல்மலாய்கது லா யதகல்ல்மூன் இல்லா அழின லஹு அர்ரஹ்மான் வ காலா ஸவாபன்

    ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

  39. 39 ذَ ٰ⁠لِكَ ٱلۡیَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَاۤءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

    ழ நம்பிக்கை லேகா அல்-யவுமு அல்-ஹக்கு ஃபமன் ஷா இத்தாஹழ இலா மாயபான்

    அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

  40. 40 إِنَّاۤ أَنذَرۡنَـٰكُمۡ عَذَابࣰا قَرِیبࣰا یَوۡمَ یَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ یَدَاهُ وَیَقُولُ ٱلۡكَافِرُ یَـٰلَیۡتَنِی كُنتُ تُرَ ٰ⁠بَۢا

    இன்னா அன்ஸர்நாகும் அஸாபான் கரீபன் யவும் யன்ழுரு அல் மார்-உ கத்தாமத் யெதாஹு வ யகூலு அல்-காஃபிரு யல்யேதனி குந்து துரா நம்பிக்கை பா

    நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

This surah in other languages