Goddestination

At-Taariq

அத்-தாரிக்

விண்மீன்

17 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلسَّمَاۤءِ وَٱلطَّارِقِ

    வஸ்-ஸமா வால்தாரிக்

    வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

  2. 2 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

    அத்ராகா அத்-தாரிக்

    தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

  3. 3 ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

    அன்-னஜ்மு அஸ்-ஸாகிப்

    அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

  4. 4 إِن كُلُّ نَفۡسࣲ لَّمَّا عَلَیۡهَا حَافِظࣱ

    இன் குல்லு நஃப்ஸ் லம்மா அலைஹா ஹாஃபிஸ்

    ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

  5. 5 فَلۡیَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ

    ஃபல்யன்ழுர் அல்-இன்சான் மேம்மா குலிகா

    மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

  6. 6 خُلِقَ مِن مَّاۤءࣲ دَافِقࣲ

    குலிகா மின் மா தாஃபிகின்

    குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

  7. 7 یَخۡرُجُ مِنۢ بَیۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَاۤىِٕبِ

    யஃக்ருஜு பைன் அஸ்-ஸுல்பி வல்-தராயிப்

    முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

  8. 8 إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ

    இன்னாஹு அலா ரஜிஹி லகாதிர்

    இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

  9. 9 یَوۡمَ تُبۡلَى ٱلسَّرَاۤىِٕرُ

    யவும் துப்ல அஸ்-ஸராயிரு

    இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

  10. 10 فَمَا لَهُۥ مِن قُوَّةࣲ وَلَا نَاصِرࣲ

    ஃபமா மின் குவ்வதின் நாசிர்

    மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

  11. 11 وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلرَّجۡعِ

    வஸ்-ஸமா தாத் அர்ரஜி

    (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

  12. 12 وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

    வல் அர்தி தாத் அஸ்-ஸதஇ

    (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

  13. 13 إِنَّهُۥ لَقَوۡلࣱ فَصۡلࣱ

    இன்னாஹு லகௌல் பஸ்ல்

    நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

  14. 14 وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

    வமா ஹு பில்ஹஃஸ்லி

    அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

  15. 15 إِنَّهُمۡ یَكِیدُونَ كَیۡدࣰا

    இன்னாஹும் யகீதூன் கைதா

    நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

  16. 16 وَأَكِیدُ كَیۡدࣰا

    வா கீது கைதா

    நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

  17. 17 فَمَهِّلِ ٱلۡكَـٰفِرِینَ أَمۡهِلۡهُمۡ رُوَیۡدَۢا

    பமேஹிலே அல்-காஃபிரீன் அம்ஹில்ஹும் ருய்தா

    எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

This surah in other languages