Goddestination

Al-Fajr

அல்-ஃபஜ்ர்

வைகறை

30 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلۡفَجۡرِ

    வல்-ஃபஜ்-ரி

    விடியற் காலையின் மீது சத்தியமாக,

  2. 2 وَلَیَالٍ عَشۡرࣲ

    வலயாலின் அஷ்ர்

    பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

  3. 3 وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ

    வஷ்-ஷஃபீ வல்வத்ரி

    இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

  4. 4 وَٱلَّیۡلِ إِذَا یَسۡرِ

    வல்லைலி இழா யாஸ்ரி

    செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

  5. 5 هَلۡ فِی ذَ ٰ⁠لِكَ قَسَمࣱ لِّذِی حِجۡرٍ

    ஹல் ஃபே ழ நம்பிக்கை லேகா கசம் லிழீ ஹிஜ்ர்

    இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

  6. 6 أَلَمۡ تَرَ كَیۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    அலம் தாரா கைஃபா ஃபாலா ரப்புக பிஆத்

    உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

  7. 7 إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ

    இரம் தாத் அல்-இமாத்

    (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,

  8. 8 ٱلَّتِی لَمۡ یُخۡلَقۡ مِثۡلُهَا فِی ٱلۡبِلَـٰدِ

    அல்-லாதீ லம் யுஃக்லக் மிஸ்லுஹா ஃபே அல்-பிலாதி

    அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

  9. 9 وَثَمُودَ ٱلَّذِینَ جَابُوا۟ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ

    தமூத அல்லாழீன ஜாபூ அஸ்-சகரா பில்-வாதி

    பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)

  10. 10 وَفِرۡعَوۡنَ ذِی ٱلۡأَوۡتَادِ

    பிர்அவ்ன் தி அல் அவ்தாத்

    மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

  11. 11 ٱلَّذِینَ طَغَوۡا۟ فِی ٱلۡبِلَـٰدِ

    அல்லாழீன தகௌ ஃபே அல்-பிலாதி

    அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

  12. 12 فَأَكۡثَرُوا۟ فِیهَا ٱلۡفَسَادَ

    ஃபாஅஸ்ரு பிஹா அல்-ஃபஸாதா

    அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

  13. 13 فَصَبَّ عَلَیۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ

    ஃபஸப் அலைஹிம் ரப்புக சவுத் அழாபின்

    எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.

  14. 14 إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ

    இன்னா ரப்பக் லபில்-மிர்ஸாதி

    நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.

  15. 15 فَأَمَّا ٱلۡإِنسَـٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَیَقُولُ رَبِّیۤ أَكۡرَمَنِ

    பாமா அல்-இன்சான் இழா இப்தாலாயுஹு ரப்புஹு ஃபாஅக்ரமாஹு வ நஆமஹு ஃபயாகுலு ரப்பி அக்ராமனி

    ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.

  16. 16 وَأَمَّاۤ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَیۡهِ رِزۡقَهُۥ فَیَقُولُ رَبِّیۤ أَهَـٰنَنِ

    இழா இப்தாலாயுஹு ஃபக்தர் அலய்ஹி ரிஸ்கஹு ஃபயாகுலு ரப்பி அஹனேனி

    எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.

  17. 17 كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡیَتِیمَ

    கல்லா பல் லா துக்ரிமூன் அல்-யதீம்

    அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

  18. 18 وَلَا تَحَـٰۤضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ

    தஹாத்துன் அலா தாமிம் அல்-மிஸ்கீன்

    ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

  19. 19 وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلࣰا لَّمࣰّا

    வதா-குலூன் அத்-துராஸா அக்லான் லம்மா

    இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

  20. 20 وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبࣰّا جَمࣰّا

    வா துஹிப்புன அல்-மால் ஹுப்பன் ஜம்

    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

  21. 21 كَلَّاۤۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكࣰّا دَكࣰّا

    இழா டோக்டே அல்-அர்த் தக்கா தக்கா

    அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

  22. 22 وَجَاۤءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفࣰّا صَفࣰّا

    வஜா ரப்புக வல் மலக் ஸஃப்ஃபன் ஸஃப்ஃபன்

    உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,

  23. 23 وَجِا۟یۤءَ یَوۡمَىِٕذِۭ بِجَهَنَّمَۚ یَوۡمَىِٕذࣲ یَتَذَكَّرُ ٱلۡإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ

    வேஜாயா யவ்மிஃழ் பிஜஹன்னம் யவ்மைழின் யதாழக்கரு அல்-இன்சான் வா அன்னா லஹு அஸ்-ஸிக்ரா

    அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

  24. 24 یَقُولُ یَـٰلَیۡتَنِی قَدَّمۡتُ لِحَیَاتِی

    யகூலு யல்யேதனி கதம்து லெஹயாதி

    "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.

  25. 25 فَیَوۡمَىِٕذࣲ لَّا یُعَذِّبُ عَذَابَهُۥۤ أَحَدࣱ

    ஃபயவ்மிழ் லா யுஅழ்இபு அழாபாஹு அஹத்

    ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

  26. 26 وَلَا یُوثِقُ وَثَاقَهُۥۤ أَحَدࣱ

    யூதிகு வஸாகா அஹத்

    மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

  27. 27 یَـٰۤأَیَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَىِٕنَّةُ

    யா அய்யதுஹா அன்-னஃப்ஸு அல்-முத்மைன்னா

    (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

  28. 28 ٱرۡجِعِیۤ إِلَىٰ رَبِّكِ رَاضِیَةࣰ مَّرۡضِیَّةࣰ

    அர்ஜீஈ இலா ரப்பிக் ராஸியா மார்திய்யா

    நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

  29. 29 فَٱدۡخُلِی فِی عِبَـٰدِی

    பாதுலி ஃபே இபாதி

    நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

  30. 30 وَٱدۡخُلِی جَنَّتِی

    வாதுலி ஜன்னதி

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

This surah in other languages